ஈரான்மீது அமெரிக்கா கழுகுப்பார்வை: வளைகுடா நோக்கி நகரும் படை!
ஈரான்மீது அமெரிக்க தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், வளைகுடாவை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை கப்பல் செல்வது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து Switzerland , டாவோஸில் Davos நடைபெற்ற உலக பொருளாதாரமன்ற மாநாட்டில் ட்ரம்ப் Donald Trump பங்கேற்றிருந்தார்.
மாநாடு முடிந்த பின்னர் இன்று (23) அவர் அமெரிக்கா நோக்கி பயணமானார்.
நாடு திரும்பும் வழியில் விமானத்திலேயே அவர் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.
“ எதுவும் நடக்க கூடாது என்பதே எனது விருப்பம். ஈரானை மிக நெருக்கமாக கண்காணித்துவருகின்றோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே கப்பல்கள் செல்கின்றன.” என்று ட்ரம்ப் கூறினார்.
அப்ரஹாம் லிங்கன் Abraham Lincoln விமானத் தாங்கிக் கப்பல் குழு தென் சீனக் கடலில் இருந்து மத்திய கிழக்குக்கு திருப்பி அனுப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
அமெரிக்கா விடுத்த தாக்குதல் எச்சரிக்கை காரணமாகவே போராட்டக்காரர்களை தூக்கிலிடும் திட்டத்தை ஈரான் கைவிட்டது எனவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, தமது நாடுமீது தாக்குதல் நடத்தப்பட்டால், “எங்களிடம் உள்ள அனைத்தையும் பயன்படுத்தி பதிலடி கொடுப்போம்” – என ஈரான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
முழுமையான மோதல் ஏற்பட்டால் அது பிராந்தியத்தையும் உலக மக்களையும் கடுமையாக பாதிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.





