ஐரோப்பா

ரஷ்யா – உக்ரைன் போர் ஐரோப்பாவையே அதிகளவில் பாதிக்கிறது : ட்ரம்ப் விமர்சனம்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது தொடர்ச்சியான முயற்சிகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று விவாதித்துள்ளார்.

விளாடிமிர் புடின் அமைதிக்காக “சலுகைகளை வழங்குவார்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த வார இறுதியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அமெரிக்கா சம்பந்தப்பட்ட ஒரு முத்தரப்பு சந்திப்பு நடைபெற உள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், குறித்த போர் ஐரோப்பாவையே அதிகளவில் பாதிப்பதாக சுட்டிக்காட்டினார்.

ஒப்பந்தம் எட்டப்பட்டால் புடின் உக்ரைன் முழுவதையும் எடுத்துக்கொள்ள மாட்டார் என்றும்  பரிந்துரைத்துள்ளார்.

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள புடினும், ஜெலென்ஸ்கியும் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாக டிரம்ப் சுட்டிக்காட்டினார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!