அரசியல் இலங்கை செய்தி

தமிழர்களுக்கு தமது பகுதியை ஆளும் அதிகாரம் அவசியம்: ராஜித வலியுறுத்து!

“மஹிந்த ஆட்சியின்போது அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாக்க போராடியவன் நான். எனவே, அதிகாரப் பகிர்வென்பது அவசியம்.

தமது பகுதியை தாமே ஆளக்கூடிய உரிமை தமிழ் மக்களுக்கு இருக்க வேண்டும்.”

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன Rajitha Senaratne வலியுறுத்தினார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு இடித்துரைத்தார்.

“ போர் முடிவடைந்த கையோடு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்தேன்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாக்க அவரது அரசாங்கத்தில் இருந்தே போராடினேன்.

13 இல் கைவைத்தால் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவேன் எனவும் அறிவித்திருந்தேன்.” என வும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

13 ஆவது திருத்தச்சட்டம் என்பதைவிட, தமிழ் மக்களுக்கு தமது பகுதிகளை ஆள்வதற்குரிய அதிகாரம் வேண்டும். இந்த நோக்கில்தானே மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது.

நல்லாட்சியின்போது தீர்வைக் காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தப்பட்டது. எனினும், எமக்கு போதிய பெரும்பான்மை பலம் இருக்கவில்லை.

சமஷ்டி ஒரு பக்கம் இருக்கட்டும். 13 ஆவது திருத்தச்சட்டம் அரசமைப்பில் உள்ள ஓர் அங்கம். அதனை ஏன் அமுல்படுத்த முடியாமல் உள்ளது?” – என ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பினார்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!