உலகம் செய்தி

“காசா அமைதி வாரியம்” – கனடாவிற்கான அழைப்பை மீளப் பெற்றார் ட்ரம்ப்!

காசா அமைதி வாரியத்தில் இணைய கனடாவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று மீளப் பெற்றார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் இடம்பெற்ற பொருளாதார மன்றத்தில் மார்க் கானி (Mark Carney) அமெரிக்காவிற்கு எதிராக உரையாற்றியதை தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தனது சமூக ஊடக பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், கனடாவின் அழைப்பை திரும்பப் பெறுவதாக  அறிவித்தார்.

இதேவேளை குறித்த குழுவில் இணைவதற்காக  30 இற்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இருப்பினும் இந்த நேரத்தில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளன.

அத்துடன் இதில் இணைய ரஷ்யா பச்சைக் கொடி காட்டியுள்ளதுடன், ஒரு பில்லியன் டொலர் பங்களிப்பதாகவும் அறிவித்துள்ளது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!