நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து நாமல் விடுத்துள்ள அறிவிப்பு!
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு Harini Amarasooriya எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை உரிய நேரத்தில் கையளிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விரைவில் கையளிக்குமாறு ஆளுங்கட்சி, எதிரணிக்கு சவால் விடுத்துவருகின்றது.
எனினும், இது விடயத்தில் எதிரணிக்குள் இழுத்தடிப்பு இடம்பெறுகின்றது. இந்நிலையில் இது தொடர்பில் நாமல் ராஜபக்சவிடம் வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “ நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கலந்துரையாடப்படுகின்றது. எதிர்க்கட்சி தலைவரால், சபாநாயகரிடம் உரிய நேரத்தில் கையளிக்கப்படும்.” – என்றார்.





