2022ம் ஆண்டு துப்பாக்கிச் சூடு – குற்றத்தை ஒப்புக்கொண்ட வட கரோலினா இளைஞன்
வட கரோலினாவில்(North Carolina) 2022ம் ஆண்டு தனது மூத்த சகோதரர் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரி உட்பட ஐந்து பேரைக் கொன்ற 18 வயது இளைஞன் கொலை மற்றும் பிற குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 18 வயதாகும் ஆஸ்டின் டேவிட் தாம்சன்(Austin David Thompson), ஐந்து முதல் நிலை கொலை குற்றச்சாட்டுகள், இரண்டு முதல் நிலை கொலை முயற்சி குற்றச்சாட்டுகள், இரண்டு கொடிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு அதிகாரியை துப்பாக்கியால் தாக்கிய குற்றச்சாட்டு ஆகியவற்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 2022ல், வட கரோலினாவின் ராலேயின்(Raleigh) குடியிருப்பு பகுதியில் தாம்சன் துப்பாக்கிச் சூடு நடத்தினார். பின்னர் ஒரு நடைபாதையில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





