திடீரென பிக்பாஷ் தொடரில் இருந்து விலகிய பாபர் அசாம்
பாகிஸ்தான்(Pakistan) அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் பாபர் அசாம்(Babar Azam), தனது மோசமான துடுப்பாட்டம் குறித்து எழுந்த கடுமையான விமர்சனங்களை அடுத்து பிக் பாஷ் தொடரின்(BBL) மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளின் பேரில், 11 போட்டிகளில் 202 ஓட்டங்கள் எடுத்த பாபர் அசாம், தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இனி பங்கேற்க மாட்டார் என்றும் விரைவில் பாகிஸ்தான் அணியில் இணைவார் என்றும் சிட்னி சிக்சர்ஸ்(Sydney Sixers) அணி அறிவித்துள்ளது.
இந்நிலையில், பாபர் அசாம் அணிக்கு ஆற்றிய சேவைகளுக்கு மிகவும் நன்றி தெரிவிப்பதாக சிட்னி சிக்சர்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





