ஐரோப்பா பேசுகிறது, ஆனால் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை – செலென்ஸ்கி விசனம்
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, சுவிட்சர்லாந்தின் டாவோஸில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஒரு மணி நேர பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, உலகத் தலைவர்களைச் சந்தித்து உரையாற்றினார்.
“ஐரோப்பா எதிர்காலத்தைப் பற்றி பேச விரும்புகிறது, ஆனால் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது” என போர் நிறுத்தத்தைப் பற்றிய நடவடிக்கை இன்மையை செலென்ஸ்கி விமர்சித்தார்.
இதன்பிறகு, , “அனைவரும் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார்கள்” என்று ட்ரம்ப் கூறினார்.
முன்னதாக, ட்ரம்ப் தனது “அமைதிக்கான சபையை” திறந்து வைக்கையில், உக்ரைன் போர் குறித்த தீர்வு “மிக விரைவில் வரும்” என்றும் அறிவித்திருந்தார்.





