உலகம் செய்தி

ட்ரம்ப்– செலென்ஸ்கி சந்திப்பு: உக்ரைன் போர் விரைவில் நிறைவுக்கு

உக்ரைனில் நடைபெறும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் (Witkoff) வெளியிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை டாவோஸில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியை ட்ரம்ப் சந்திக்க உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ செல்லும் முன் கருத்து தெரிவித்த விட்காஃப், “இந்த பிரச்சினையை தீர்க்கக்கூடிய ஒரு கட்டத்திற்கு நாங்கள் வந்துள்ளோம்” என்று கூறினார்.

அவர் குறிப்பிட்ட பிரச்சினையை தெளிவாகச் சொல்லவில்லை என்றாலும், அண்மைய பேச்சுவார்த்தைகள் உக்ரைனின் தொழில்துறை பகுதியாக உள்ள டான்பாஸ் பகுதியின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்தியதாக கூறப்படுகிறது.

இதன்படி, கியேவுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கப்படும் நிலையில், அந்த பகுதி இராணுவமயமாக்கப்படாத மற்றும் சுதந்திர பொருளாதார மண்டலமாக மாற்றப்படும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

“இரு தரப்பினரும் தீர்வை விரும்பினால், அது நிச்சயம் சாத்தியம்” என்று விட்காஃப் தெரிவித்தார். அவர், ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னருடன் மாஸ்கோ செல்லவுள்ள நிலையில், ட்ரம்ப், “அவர்கள் ஒப்பந்தத்துக்கு நெருங்கி வருகிறார்கள். பலர் உயிரிழந்து வருகின்றனர், இதை நிறுத்த வேண்டும்” என்று கூறினார்.

கடந்த வாரம், ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒப்பந்தம் செய்யத் தயாராக உள்ளார் எனத் தான் நினைப்பதாகவும், ஆனால் ஜெலென்ஸ்கி அதற்குத் தயாராக இல்லை எனவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, ரஷ்ய தாக்குதல்களால் கியேவின் மின்சார உட்கட்டமைப்பு கடுமையாக சேதமடைந்ததைத் தொடர்ந்து, அவர் தனது பயணத்தை ரத்து செய்ய தீர்மானித்தார். கடும் குளிர்காலத்தில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் வெப்பம், தண்ணீர் மற்றும் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, கிரீன்லாந்தின் எதிர்காலம் தொடர்பாக ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய நேட்டோ கூட்டாளிகள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், உக்ரைன் போர் விவகாரத்தில் கவனம் சிதறக்கூடும் என்ற கவலை கியேவில் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!