இலங்கையின் விவசாயத்துறையை மேம்படுத்த சீனா நேசக்கரம்!
இலங்கையில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்குரிய ஒத்துழைப்பை வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது.
சீன – இலங்கை விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இதற்குரிய நடவடிக்கை இடம்பெறும்.
மேற்படி ஒப்பந்தத்தின் பிகாரம் இலங்கையின் விவசாயத் துறையிலும் அது சார்ந்த சுற்றுச்சூழல் ரீதியாகவும் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்த கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது.
சீனாவும் இலங்கையும் இணைந்து முன்னெடுக்கும் வேலைத்திட்டமாக, நாட்டின் விவசாயத் துறையிலுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து உற்பத்தித்திறனை அதிகரிப்பது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், நாட்டின் விவசாயத் துறை மற்றும் அது சார்ந்த சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சீனாவின் தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தக்கூடிய விதம் குறித்து ஆராயப்பட்டது.
அத்துடன், வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைத்தல் மற்றும் பேரே வாவியைச் சுத்தப்படுத்தும் பணிகளுக்காகச் சீனாவிலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய ஒத்துழைப்புகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.





