இலங்கை செய்தி

டிட்வா புயலால் சேதமடைந்த பாடசாலைகளைச் சீரமைக்கத் துருக்கி அரசாங்கம் ஆதரவு

இலங்கைக்கான துருக்கி தூதுவர் கலாநிதி செமி லுட்ஃபூ டர்குட் (Dr. Semih Lutfu Turgut) மற்றும் அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு அண்மையில்  பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

‘டிட்வா’ புயலால் சேதமடைந்த பாடசாலைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு துருக்கி அரசாங்கத்தின் உதவியை அமைச்சர் கோரினார்.

இதற்கு சாதகமாக பதிலளித்த தூதுவர், பாதிக்கப்பட்ட பாடசாலைகளை நேரில் சென்று பார்வையிடவுள்ளதாக தெரிவித்தார்.

குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கு தீர்வு காண்பதற்கு துருக்கி அரசாங்கம் தனது ஒத்துழைப்பை வழங்க விருப்பம் தெரிவித்தது.

இரு நாடுகளுக்கும் இடையே கல்வி சார் உறவுகளை மேம்படுத்த கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு வேலைத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசார ரீதியாக இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சந்திப்பில் துருக்கி தூதரகத்தின் மூன்றாம் செயலாளர் ருமெய்சா அக்சின் (Rumeysa Akcin) அவர்களும் கலந்துகொண்டார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!