விஜய்க்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!
தமிழக வெற்றிக் கழகத்துக்கு TVK விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது.
இதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ள தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது
.
அதன் அடிப்படையில், அக்கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஒரே பொது சின்னமாக விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
அதேநேரத்தில், அங்கீகாரம் பெறாத, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்பதால், இந்த சின்னம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





