தென் கொரியாவின் முன்னாள் பிரதமர் ஹான் டக்-சூவுக்கு 23 ஆண்டுகள் சிறை!
தென் கொரியாவின் முன்னாள் பிரதமர் ஹான் டக்-சூவுக்கு ( Han Tak-soo) 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் கொரிய நீதிமன்றம் நேற்று (21) இவ்வாறு தீர்ப்பளித்தது.
முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-யோல் இராணுவச் சட்டத்தை அறிவிக்க உதவியதற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
அமைச்சரவை குழுக்கள் மூலம் இராணுவச் சட்டத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கு உதவியதற்காகவும், இராணுவச் சட்ட ஆவணங்களை போலியாக உருவாக்கி அழித்ததற்காகவும் அவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டது.
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி யூன் தற்போது சிறையில் உள்ளார் மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டுகள் உட்பட எட்டு குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





