இந்தியா தமிழ்நாடு

அனல் கக்கும் தமிழக அரசியல் களம்: நாளை நேரில் களமிறங்கும் மோடி!

பிரதமர் மோடி நாளை (23) தமிழகம் வருகின்றார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே மோடிவருகின்றார்.

பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஓர் அங்கமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் அனல் கக்குகின்றது.

தமிழகத்தில் பிரதான கட்சிகளுள் ஒன்றான அ.தி.மு.க., பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து களமிறங்குகின்றது.

இந்தக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்பன கைக்கோத்துள்ளன.

கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையிலேயே மதுராந்தகத்தில் நாளை 23-ம் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றுவார். கூட்டணி தலைவர்களும் உரையாற்றவுள்ளனர்.

மாலை 5 மணிக்கு பொதுக் கூட்டம் முடிந்த பின், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி மீண்டும் டெல்லி செல்வார்.

Dila

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!