இலங்கை செய்தி

அனர்த்த முகாமைத்துவத்தைக் கையாள புதிய பொறிமுறை அவசியம்!

அனர்த்த முகாமைத்துவத்தைக் கையாள்வதற்கு புதிய வியூகத்துடன்கூடிய பொறிமுறையொன்று அவசியம் – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஏதேனும் ஒரு அமைச்சின்கீழ் கொண்டுசென்று சொறுவுவதைவிட, அனர்த்த முகாமைத்துவத்துக்கென தனி அமைச்சை அமைப்போம். புதிய வியூகம் மற்றும் பொறிமுறையை உருவாக்குவோம்.

பேரிடரின்போது எதிரணி தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை என ஆளுங்கட்சி குற்றஞ்சாட்டியது. இதனை நாம் நிராகரிக்கின்றோம்.

தூதரக மற்றும் இராஜதந்திர மட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டோம். கோரிக்கைகளை விடுத்தோம். எல்லா விடயங்களையும் ஊடகங்களில் பிரச்சாரம் செய்ய முடியாது.

தனவந்தர்களின் உதவியுடன் வைத்தியசாலைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

மக்களின் தேவைகளை அறிவதற்காகவே இடைத்தங்கள் முகாம்களுக்கு சென்று தகவல்கள் பெறப்பட்டன.

இலங்கைக்கு உதவி செய்ய வேண்டாம் என எந்தவொரு நாட்டிடமும் நாம் கோரவில்லை. எனவே, அப்பட்டமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.” – என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!