பாகிஸ்தான் வணிக வளாக தீ விபத்து – பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு
பாகிஸ்தானின்(Pakistan) கராச்சியில்(Karachi) உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 47 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வணிக வளாகத்தில் ஒரு கடையில் இருந்து மட்டும் 30 உடல்களின் எச்சங்கள் மீட்கப்பட்டதாக கராச்சி தெற்கு துணை காவல்துறை அதிகாரி ஜெனரல் அசாத் ராசா(Asad Raza) குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேடுதல் நடவடிக்கைகள் தொடரும் போது இறப்பு எண்ணிக்கை 100 அல்லது அதற்கு மேற்பட்டதாக உயரக்கூடும் என்று அசாத் ராசா குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி
பாகிஸ்தான் வணிக வளாக தீ விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு




