உலகம்

ட்ரம்பின் அமைதி வாரியத்தில் சேர 10 இற்கும் மேற்பட்ட நாடுகள் ஒத்துழைப்பு!

ஜனாதிபதி ட்ரம்பின் “அமைதி வாரியத்தில்” சேர 10க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல், எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பெலாரஸ், ​​மொராக்கோ, ஹங்கேரி மற்றும் கனடா ஆகிய நாடுகள் ட்ரம்பின் அழைப்பை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் இன்று ட்ரம்பின் அழைப்பை ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளது.

இந்த குழுவில் உலகத் தலைவர்கள் இருப்பார்கள். இதன் தலைவராக ட்ரம்ப் செயற்படுவார். அத்துடன் மூன்று ஆண்டு உறுப்பினர் பதவியை தக்கவைத்துக் கொள்ள விரும்பும் நாடுகள் 1 பில்லியன் டொலர்கள் பங்களிக்க வேண்டும்  என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

இருப்பினும் கனடா பணம் செலுத்தப் போவதில்லை என அறிவித்துள்ளது. சில நாடுகள் மிகக் குறைவாக, சுமார் 20 மில்லியன் டொலர்களை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு டொலரும்” காசாவில் வாரியத்தின் ஆணைக்காக செலவிடப்படும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!