10000 ரூபாயால் அதிகரித்த தங்கத்தின் விலை!
உலக சந்தைகளில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 4,800 அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது.
வெளிநாட்டு ஊடகங்கள் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,843 அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கின்றன.
இதேபோல், உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப நாட்டிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
கொழும்பு ஹெட்டிவீதிய தங்க சந்தை வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, இன்று காலை தங்கத்தின் மொத்த விலையில் 10,000 அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, “22 காரட்” தங்கத்தின் விலை 351,500 ஆகவும், 24 காரட்” தங்கத்தின் விலை 380,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.





