சர்வதேச சந்தையில் 5000 அவுன்ஸை எட்டும் தங்கத்தின் விலை!
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $4,800 ஐத் தாண்டியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கிரீன்லாந்து மீதான நாட்டம் ஐரோப்பாவுடனான வர்த்தகப் போரை தூண்டியுள்ளதை தொடர்ந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னதாக $4,843.67 என்ற சாதனை அளவை எட்டிய பின்னர், ஸ்பாட் தங்கம் (Spot) அவுன்ஸ் ஒன்றுக்கு 1.2% உயர்ந்து $4,821.26 ஆக பதிவாகியுள்ளது.





