இந்தியா செய்தி தமிழ்நாடு

ஆட்டம் காணும் ஓ.பி.எஸ். அணி! வைத்திலிங்கமும் ‘அவுட்’!

தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சி தாவும் படலமும் ஆரம்பமாகி, அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் Vaithilingam தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

சபாநாயகருக்கு இராஜினாமா கடிதத்தை அவர் அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் அவர் இன்று (21) தி.மு.கவில் DMK இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றுபட்ட அ.தி.மு.க. என்ற கோஷத்தை முன்வைத்து அரசியல் நடத்தி வருகிறார்.

அவரது அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து அண்மையில் தி.மு.க.வில் சேர்ந்தார்.

அதேபோல், ஜே.சி.டி. பிரபாகர் தமிழக வெற்றிக் கழகத்துடன் சங்கமமானார்.

இந்நிலையிலேயே வைத்திலிங்கமும் அந்த அணியில் இருந்து விலகி, தி.மு.க.வில் இன்று இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் நிகழ்வின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் அதிகாரப்பூர்வமாக சங்கமிப்பார் என தெரியவருகின்றது.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!