இலங்கை செய்தி

ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவருடன் பிரதமர் பேச்சு!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசாடோ கான்டாவுடன் (Masato Kanda) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya பேச்சு நடத்தியுள்ளார்.

உலகப் பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டிற்குச் சமாந்தரமாக மேற்படி சந்திப்பை அவர் நடத்தியுள்ளார்.

இதன்போது இலங்கையின் பொருளாதார மீட்சி, பேரிடரின் பின்னரான மீள் கட்டமைப்பு பணி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

அதேவேளை, Menzies Aviation நிறுவனத்தின் தலைவர் ஹசன் எல் ஹூரி Hassan El Houry) உடனும் பிரதமர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

Hassan El Houry

இதன்போது, விமானப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் வான்வழித் தொடர்புகளை மேம்படுத்துவதில் ஏற்படுத்தக்கூடிய ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!