ஐரோப்பாவின் மிகப்பெரிய தூதரகம் – சீனாவின் திட்டத்தை அங்கீகரித்த பிரித்தானியா
பிரிட்டன்(Brittain) அரசாங்கம், ஐரோப்பாவின் மிகப்பெரிய தூதரகத்தை லண்டனில்(London) கட்டுவதற்கு சீனாவின்(China) திட்டத்திற்கு நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்ததுள்ளது.
லண்டன் கோபுரத்திற்கு அருகிலுள்ள இரண்டு நூற்றாண்டு பழமையான ராயல் மின்ட் கோர்ட்(old Royal Mint Court) இருந்த இடத்தில் புதிய தூதரகத்தை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது.
ஆனால் உள்ளூர்வாசிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரிட்டனில் உள்ள ஹாங்காங்(Hong Kong) ஜனநாயக ஆதரவு பிரச்சாரகர்களின் எதிர்ப்பால் மூன்று ஆண்டுகளாக இந்த திட்டம் தடைபட்டது.
இந்நிலையில், இந்த மாதம் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்(Keir Starmer) சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவதற்கு முன்னதாக இந்த ஒப்புதல் வந்துள்ளது.





