270 கோடி ஐபிஎல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கூகிள் ஜெமினி
கூகிளின் செயற்கை நுண்ணறிவு(Ai) தளமான ஜெமினி(Gemini), இந்தியன் பிரீமியர் லீக்(IPL) தொடருடன் அதிக மதிப்புள்ள அனுசரணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் ₹270 கோடி மதிப்புடையது என்றும் மூன்று தொடர்களுக்கு அதாவது 2026 முதல் 2028 நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய தொழில்நுட்பம் சார்ந்த அனுசரணைகளில் ஒன்றாகும்.
இந்த ஒப்பந்தம் இந்திய விளையாட்டுகளில், குறிப்பாக கிரிக்கெட்டில் AI நிறுவனங்களின் வளர்ந்து வரும் ஆர்வத்தை உறுதிப்படுத்துகிறது, இது மிகப்பெரிய டிஜிட்டல் அணுகலையும் ரசிகர் ஈடுபாட்டையும் வழங்குகிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஜெமினி ஒரு தொடருக்கு சுமார் ₹90 கோடி முதலீடு செய்யும்.





