செய்தி தமிழ்நாடு

தமிழகத்தில் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்ட தங்க விலை

தமிழகத்தில் ஆபரணத் தங்க விலை இன்று (20) ஒரே நாளில் பவுனுக்கு3,600 ரூபா உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதாவது, ஒரு பவுன் தங்கம் 1,11,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்​னை​யில் இன்று காலை 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 160 ரூபா உயர்ந்து, 13,610 ரூபாவுக்கு விற்​பனை செய்யப்பட்டது.

அத்துடன் பவுனுக்கு 1,280 ரூபா உயர்ந்து, 1,08,880 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

மேலும் 24 கரட் தங்​கம் பவுன்1,18,776 ரூபாவுக்கும் விற்பனையானது.

இந்நிலையில், தங்கம் விலை மாலையில் மீண்டும் 2,320 ரூபா அதிகரித்து ஒரே நாளில் பவுனுக்கு 3,600 ரூபா உயர்ந்துள்ளது.

மேலும் கிராமுக்கு 290 ரூபா உயர்ந்து 13,900 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதாவது, பவுனுக்கு 2,320 ரூபா உயர்ந்து 1,11,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலக அளவில் பொருளா​தார நிலை​யற்ற தன்​மை, கிரீன்லாந்து பிரச்​சினை, அமெரிக்​கா, சீனா ஆகிய நாடுகள் தங்​கத்​தில் மீது அதிக முதலீடு செய்​வது போன்ற காரணங்​களால், தங்​கத்​தின் தேவை உயர்ந்து, விலை உயர்ந்​துள்​ளதாக கூறப்படுகிறது.

அதேபோன்று வெள்​ளி​யும் தொழில்துறை பயன்​பாட்​டுக்கு அதி​கள​வில் கொள்வனவு செய்யப்படுவதால, விலை உயர்வடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!