இந்திய குடியரசு தின விழா: 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு!
இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்குமாறு 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 77-வது குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.
டெல்லி கர்தவ்ய பாதையில் குடியரசு தினவிழா நடைபெறுகின்றது.
ராணுவத்தின் வலிமை மற்றும் கலாசார பன்முக தன்மையின் வளமை ஆகியவற்றை பறைசாற்றுவதுடன் இந்நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் உர்சுலா வான்டர் லெயன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்குமாறு தேச கட்டமைப்பில் பெரும் பங்காற்றிய, பல்வேறு நிலைகளில் உள்ளவர்களை கௌரவிக்கும் வகையில், 10,000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
நாட்டுக்கு வருவாய் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்காக பணியாற்றியவர்கள், சிறந்த புதிய கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பலரும் இதில் அடங்குவர்.





