ஆப்கானிஸ்தானில் இருந்து தஜிகிஸ்தானுக்குள் நுழைந்த ஆயுதமேந்திய நபர்கள் கொலை!
ஆப்கானிஸ்தானில் இருந்து தஜிகிஸ்தானுக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் நான்கு ஆயுதமேந்திய நபர்கள் எல்லைக் காவலர்களுடனான மோதலின் போது கொல்லப்பட்டதாக தஜிகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக் குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானின் படாக்ஷான் (Badakhshan) மாகாணத்தை ஒட்டிய ஒரு கிராமத்திற்கு அருகில் தாஜிக் (Tajik ) எல்லைக் காவலர்களால் இந்தக் குழு கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த நபர்கள் சரணடையும் உத்தரவுகளை மறுத்து, ஆயுதமேந்திய எதிர்ப்பில் ஈடுபட்டதாகவும், இதனைத் தொடர்ந்தே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நால்வரும் “பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்” என்று குற்றம் சாட்டிய போதிலும், அவர்களின் அடையாளங்கள் அல்லது தொடர்புகள் குறித்து மேலும் விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
மேற்படி கொலை செய்யப்பட்ட நபர்கள் தஜிகிஸ்தானிற்குள் போதைப்பொருட்களை கடத்த முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.





