ஐரோப்பா

ஸ்பெயின் ரயில் விபத்து தொடர்பில் வெளிப்படையான விசாரணைகளை கோரும் தொழிற்சங்கம்!

ஸ்பெயினில் இடம்பெற்ற கோர ரயில் விபத்து தொடர்பாக வெளிப்படையான விசாரணை தேவை என போக்குவரத்து தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

அதிவேக மோதலுக்கான காரணங்களை “ஆழமாக” விசாரிக்க வேண்டியது “அவசியம்” என்று ஸ்பெயின் போக்குவரத்து தொழிற்சங்கம் கூறுகிறது.

இது தொடர்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தொடர்புடைய பொறுப்புகளைத் தீர்மானிக்க” விசாரணையில் “முழு வெளிப்படைத்தன்மை மற்றும் கடுமை” தேவை என வலியுறுத்தியுள்ளது.

இதுபோன்ற விபத்து மீண்டும் நடக்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்” எடுக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேற்படி விபத்து தொடர்பில் நாட்டின் ரயில்வே விபத்து விசாரணை ஆணையத்தால்  சிவில் விசாரணை மேற்கொள்ளப்படுவதுடன்,    சிவில் காவலரால்  குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

ஸ்பெயின் ரயில் விபத்து – அதிகரிக்கும் மரணங்கள்!

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!