சீனாவில் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட வெடி விபத்து – 08 பேர் மாயம்!
சீனாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன். 80 இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எட்டு பேர் மாயமாகியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மங்கோலியாவின் (Mongolia) உள் பகுதியில் அமைந்துள்ள யுனைடெட் ஸ்டீல் (United Steel) ஆலையில் நேற்று பிற்பகல் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.
இதனால் குறித்த பகுதியில் சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெடிப்பிற்கான காரணம் தொடர்பில் அறிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





