12 மணிநேர போராட்டம் : 06 பேர் மரணம் – பாகிஸ்தானில் பற்றி எரியும் வணிக வளாகம்!
பாகிஸ்தானின் – கராச்சியில் உள்ள வணிக கட்டிடம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 10 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீவிபத்தால் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயை அணைக்க 12 மணிநேரமாக போராடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி, தீயில் சுமார் 30 சதவீதம் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டிடத்தின் சில பகுதிகள் இடிந்து விழத் தொடங்கியுள்ளதாகவும், மீட்பு அதிகாரிகள் முழு கட்டமைப்பும் இடிந்து விழும் என்று அஞ்சுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





