இந்தோனேசியாவில் 11 பேருடன் மாயமான விமானத்தின் எச்சங்கள் கண்டுப்பிடிப்பு!
இந்தோனேசியாவில் 11 பேருடன் காணாமல் போன இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகள் இன்று கண்டறியப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசியில் (Sulawesi) உள்ள புலுசருன் (Bulusaraung) மலைப்பகுதியில் சிதைவுகள் இனங்காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் இருந்தவர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை, மேலும் மக்களைக் கண்டுபிடிக்க இந்தோனேசிய அதிகாரிகள் சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சகத்திற்கு சொந்தமான ATR 42-500 விமானம் நேற்று காணாமல்போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.





