அரசியல் ஆயுதமாக மாறியுள்ள “கல்வி”!
கல்வியைக்கூட அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் நிலைக்கு எதிரணி வந்துவிட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார்.
பேரிடரை வைத்து அரசியல் நடத்திய எதிரணி, தற்போது கல்வி மறுசீரமைப்பையும் குழப்ப முற்படுகின்றது. இதற்கு மக்கள் இடமளிக்கமாட்டார்கள் எனவும் அவர் கூறினார்.
அத்துடன், கல்வியில் ஆபாசத்தை புகுத்துவதற்கு முயற்சி இடம்பெறுவதாக எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்துள்ளார்.
நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் கல்வி மறுசீரமைப்பு நிச்சயம் நடக்கும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.





