UKவின் M6 மோட்டார் பாதை மூடப்பட்டுள்ளது : பயண தாமதங்கள் குறித்து எச்சரிக்கை!
பிரித்தானியாவின் கிரேட்டர் மென்செஸ்டரில் (Greater Manchester) இரு திசைகளிலும் M6 மோட்டார் பாதை இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மேற்படி பாதைகள் மூடப்பட்டுள்ளன.
இதன்காரணமாக ஜங்ஷன் (Junction) 26 மற்றும் 23 இல் கடுமையான சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், வாகன ஓட்டிகள் ஏறக்குறைய 01 மணித்தியாலம் தாமதத்தை எதிர்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரேட்டர் மென்செஸ்டர் காவல்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து அதிகாரிகள் உள்ளிட்ட அவசர சேவைகள் தற்போது சம்பவ இடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





