சோதனைக் காலத்தை நீட்டித்தது விர்ஜின் அவுஸ்திரேலியா
விர்ஜின் அவுஸ்திரேலியா நிறுவனம், தனது விமானங்களின் உட்புறப்பகுதியில் (Cabin) செல்லப்பிராணிகளுடன் பயணம் செய்யும் திட்டத்தின் சோதனைக் காலத்தை எதிர்வரும் ஜூன் மாதம் இறுதி வரை நீட்டித்துள்ளது.
கடந்த கிறிஸ்துமஸ் காலத்தில் 300க்கும் மேற்பட்ட நாய் மற்றும் பூனைகளுடன் நடத்தப்பட்ட இந்தச் சோதனைக்குக் கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது மெல்பேர்ண், கோல்ட் கோஸ்ட் மற்றும் சன்ஷைன் கோஸ்ட் இடையிலான வான்வழிகளில் மட்டுமே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்கீழ், 8 வாரங்களுக்கு மேல் வயதுடைய மற்றும் 8 கிலோகிராம் வரை எடையுள்ள பூனைகள் மற்றும் நாய்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
எதிர்காலத்தில் கூடுதல் வழித்தடங்களுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது





