கத்தாரில் உள்ள அமெரிக்க துருப்புகளை வெளியேறுமாறு உத்தரவு!
ஈரானுடனான பதட்டங்கள் அதிகரித்து வருவதால், கத்தாரின் (Qatar) அல் உதெய்த் (Al Udeid) தளத்தில் உள்ள அமெரிக்க இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என இன்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டால் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது தெஹ்ரான் தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே அமெரிக்க துருப்புக்களை வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அல் உதெய்டில் தற்போது 10,000 துருப்புக்கள் உள்ளனர். அவர்களில் சிலர் வெளியேறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஜுன் மாதம் , ஈரானில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்துவதற்கு முன்பு, மத்திய கிழக்கில் உள்ள தளங்களில் இருந்து சில பணியாளர்கள் மாற்றப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
ஈரானில் போராட்டக்காரர்களை அடக்க தூக்கிலிடப்போவதாக தெஹ்ரான் மிரட்டியுள்ளது. இந்நிலையில் ஈரான் அவ்வாறு செய்தால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





