செய்தி பொழுதுபோக்கு

களம்காவல் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில், இயக்குநர் ஜிதின் கே. ஜோஷ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘களம்காவல்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 5-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி, வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற இப்படம், வரும் ஜனவரி 16-ஆம் திகதி சோனி லைவ் (Sony LIV) ஓடிடி தளத்தில் வெளியாகிறது

இந்தப் படத்தில் விநாயகன், மம்மூட்டி பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

மேலும், இதில் பல நடிகைகள் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியான விநாயகனின் விசாரணையும் மம்மூட்டியின் வில்லத்தனமும் படத்திற்கு பலமாக அமைந்தது.

இந்த நிலையில், களம்காவல் திரைப்படம் வரும் ஜன. 16 ஆம் திகதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!