ஈரான் போராட்டம் – பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக வாக்குமூலம் பதிவு!
ஈரானில் ஆர்ப்பாட்டம் தொடங்கியதில் இருந்து அரசு ஊடகங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்து குறைந்தபட்சம் 97 வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாக்குமூலங்கள் சித்திரவதை மூலம் பெறப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஈரானிய அதிகாரிகள் அமெரிக்கா அல்லது இஸ்ரேலை குற்றம் சாட்டும் வகையில் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக தற்போது நடந்து வரும் போராட்டங்களுக்கு பின்னால் அமெரிக்காவும், இஸ்ரேலும் இருக்கும் வகையில் திரிபுப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஈரானில் பொருளாதார சரிவு காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்கள் தற்போது வலுவடைந்துள்ளன. சுமார் 2000இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





