இலங்கை மீண்டெழுவதற்கு வழிகாட்டும் ஐ.நா.!
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதி Azusa Kubota, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சகத்தில் நேற்று (14) இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
டித்வா சூறாவளியின் தாக்கங்கள் மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மறுகட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளன.
அனர்த்தத்திற்குப் பிந்தைய தேவைகள் மதிப்பீடு (Post-Disaster Needs Assessment – PDNA) தொடர்பான விரிவான விளக்கத்தை ஐ.நா. UNDP அதிகாரிகள் வழங்கினர்.
மதிப்பீட்டு செயல்முறை , மீட்பு மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளுக்கு வழிகாட்ட முன்மொழியப்பட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், இழப்பு மற்றும் சேதங்களை ஈடுசெய்வதற்குரிய நிதி Fund for Responding to Loss and Damage (FRLD) தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.





