ஈரானில் அதிகரிக்கும் பதற்ற நிலையில் – சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!
சர்வதேச சந்தையில் இன்று கச்சா எண்ணெயின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
இதன்படி ஒரு பீப்பாய்க்கு 28 காசுகள் அல்லது 0.4 சதவீதம் உயர்ந்து $64.15 டொலராக அதிகரித்துள்ளது.
அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய் 28 காசுகள் அல்லது 0.5 சதவீதம் உயர்ந்து 59.78 டொலராக அதிகரித்துள்ளது.
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒன்றான ஈரானில் அதிகரித்துள்ள உள்நாட்டு மோதல்கள் எண்ணெய் உயர்விற்கு பிரதானமாக பங்களித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கிடையே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும் 25 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்ளும் என அறிவித்துள்ளார். இதுவும் எண்ணெய் விலை உயர்வுக்கு கணிசமாக பங்களித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





