ICE அதிகாரிகளை பாதுகாக்க கூடுதல் முகவர்களை அனுப்பிய ட்ரம்ப் நிர்வாகம்!
அமெரிக்காவில் ICE அதிகாரிகளால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் “நூற்றுக்கணக்கான” கூடுதல் கூட்டாட்சி சட்ட அமலாக்க முகவர்கள் மினசோட்டாவிற்கு (Minnesota) அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குடியேற்ற சோதனைகளின் போது இருக்கும் ICE மற்றும் எல்லை ரோந்துப் பணியாளர்களைப் பாதுகாக்க முகவர்கள் அனுப்பப்படுவதாக உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் ( Kristi Noem) தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மின்னியாபோலிஸ் (Minneapolis) மேயர் ஜேக்கப் ஃப்ரே (Jacob Frey), ICE முகவர்கள் நகரத்தில் பதற்றங்களை அதிகரிப்பதாகவும், அவர்கள் நகரத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம்வங்கள் ட்ரம்ப் நிர்வாகம் குடியேற்றங்களை கட்டுப்படுத்த கடும்போக்கை பின்பற்றுவதை காணக்கூடியதாக உள்ளது.





