சி.ஐ.பி. விசாரணைக்காக டெல்லி பறந்தார் விஜய்!
சி.ஐ.பி. CIB விசாரணையை எதிர்கொள்வதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சென்னையில் இருந்து தனி விமானம்மூலம் டொல்லி நோக்கி பயணமானார்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றுவருகின்றது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகுமாறு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய இந்திய நேரப்படி இன்று முற்பகல் 11 மணி அளவில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் முன்னிலையாவார்.
டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் இன்று காலை வருகை வந்திருந்தார். தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
விஜயுடன் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.
விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி டெல்லி காவல்துறையிடம் அக்கட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கமைய அவருக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.





