டெல்லியில் குண்டர்களுக்கு ஆயுதங்கள் வழங்கிய 67 வயது பெண் கைது
டெல்லியில்(Delhi) செயல்படும் குண்டர்கள் மற்றும் பயங்கரமான குற்றவாளிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய குற்றச்சாட்டில் 67 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தைத் தவிர்க்க தனது வயதைப் பயன்படுத்தி, அந்தப் பெண் மத்தியப் பிரதேசத்தில்(Madhya Pradesh) உள்ள விநியோகஸ்தர்களிடம் இருந்து துப்பாக்கிகளை வாங்கி டெல்லி அல்லது மீரட்டுக்கு(Meerut) கொண்டு செல்வார், அங்கு ஆயுதங்கள் குண்டர்களுக்கு விற்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீரட்டில் வசிக்கும் ராம்பிரி(Rambri) என்ற பெண் கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து நான்கு கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் துப்பாக்கிகளின் பயன்பாடு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.





