நழுவிப்போன இந்திய – அமெரிக்க ஒப்பந்தம் : வர்த்தகப் போரினால் முதலீட்டாளர்கள் கவலை
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் போனதற்குப் பிரதமர் மோடி, ஜனாதிபதி ட்ரம்பை தொலைபேசியில் அழைக்காததே காரணம் என அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹார்வர்ட் லட்னிக் (Howard Lutnick) வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
‘ஆல்-இன்’ (All-In) எனும் நேர்காணலில் கருத்துத் தெரிவித்த அவர், ஒப்பந்தத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்தும், இராஜதந்திரக் காரணங்களால் அந்த அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், இதனால் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியப் பொருட்கள் மீதான வரியை 50 சதவீதமாக ட்ரம்ப் அதிகரித்தார்.
குறிப்பாக ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டது.
இந்த வர்த்தகப் பதற்றம் காரணமாக இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது





