பிரித்தானியாவில் பாலியல் குற்றச்சாட்டில் இந்தியர் ஒருவர் கைது
பிரித்தானியாவின்(Britain) கோவென்ட்ரி(Coventry) நகரில் சிறுமிகளை இணையம் மூலம் பாலியல் வன்கொடுமை செய்ததாக இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குரீத் ஜீதேஷ் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு பிரிட்டனுக்கு வந்து ஒரு மாணவர் விடுதியில் வசித்து வந்துள்ளார்.
“நேற்று பல வயது குறைந்த சிறுமிகளை ஆன்லைனில் பாலியல் வன்கொடுமை செய்து அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்ததற்காக இந்தியர் குரீத் ஜீதேஷ் கைது செய்யப்பட்டார்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவென்ட்ரி அதிகாரிகள் குரீத் ஜீதேஷ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எந்த பொது அறிக்கையையும் வெளியிடவில்லை.





