புலி புராணத்தோடு புத்தாண்டில் அரசியல் விமர்சனத்தை ஆரம்பித்தது மொட்டு கட்சி!
” 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவரின் மகன்தான் நாமல் ராஜபக்ச. எனவே, சவால்களை கண்டு ஓடி ஒளியும் நபர் அவர் அல்லர்.”
– இவ்வாறுமுன்னாள் இராஜாங்க அமைச்சர் சானக வக்கும்புர Chanaka Wakumbura தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி (SLPP) தலைமையகத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கிராமிய மட்டத்திலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மாகாணசபைத் தேர்தல் நடக்கும் பட்சத்தில் எமது கட்சியின் பலத்தை காண முடியும்.
முடிந்தால் கூடிய விரைவில் தேர்தலை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம். நாமல் ராஜபக்ச தலைமையில் அத்தேர்தலில் நாம் வெல்வோம்.
30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர்தான் மஹிந்த ராஜபக்ச. அவர் துணிகரமாகவே அன்று முடிவுகளை எடுத்தார். எனவே, அவரின் மகனான நாமல் ராஜபக்சவுக்கும் சவால்களுக்கு முகங்கொடுப்பதென்பது பிரச்சினைக்குரிய விடயம் அல்ல.
நாட்டை வழிநடத்துவதற்குரிய வேலைத்திட்டம் எம் வசம் உள்ளது. தேவையான நேரத்தில் அது வெளிப்படுத்தப்படும் ” – என்றார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சானக வக்கும்புர.





