சினிமாவுக்கு ‘குட்பை’: ஏன் இந்த முடிவு?
மும்தாஜ் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவர் திரையுலகை விட்டு முழுமையாக விலகி இருக்கிறார். இதற்கு அவர் கூறும் முக்கிய காரணம் ஆன்மீக மாற்றம்.
ஒரு கட்டத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரங்கள் மற்றும் திரைப்படங்கள் தனது தனிப்பட்ட கொள்கைகளுக்கு முரணாக இருப்பதை உணர்ந்ததாக கூறியுள்ளார்.
தனது கடைசி விருப்பம் தான் இறந்த பிறகு தனது பழைய கவர்ச்சியான புகைப்படங்களை யாரும் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்று கண்ணீர் மல்கக் கேட்டுக் கொண்டுள்ளார். “அவை எனக்கு மரணத்திற்குப் பிறகும் வலியைத் தரும்” என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

மும்தாஜ் தற்போது முழுமையாக இஸ்லாமிய மார்க்கப் பாதையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். தற்போது அவர் பொது இடங்களுக்கு வரும்போது ஹிஜாப் அணிவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். இது ஏதோ விளம்பரத்திற்காகச் செய்யப்பட்டது அல்ல, தனது மன அமைதிக்காக எடுத்த முடிவு என்கிறார்.
சமீபத்தில் அவர் மெக்கா மற்றும் மதீனா சென்ற புகைப்படங்கள் மற்றும் அங்கு அவர் அழுத வீடியோக்கள் வைரலாகின. அவர் தன் கடந்த கால வாழ்க்கையை நினைத்து வருந்துவதாகவும், இனி வரும் காலத்தை ஆன்மீகத்தில் கழிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் அவர் உடல் எடை அதிகரித்தது குறித்துப் பலரும் கிண்டல் செய்து வந்தனர் அதற்கு அவர் காட்டமான மற்றும் உருக்கமான பதில்களை அளித்துள்ளார். மும்தாஜ் தானது உடல் எடை அதிகரிக்கக் காரணம் உணவு அல்ல, தனக்கு இருக்கும் ‘ஆட்டோ இம்யூன்’ (Auto-immune) என்ற நோயால்தான் என்று வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நோயால் தான் அனுபவித்த உடல் ரீதியான வலிகள் மற்றும் மன அழுத்தத்தைப் பற்றிப் பேசும்போது, அவர் பலமுறை மேடைகளிலேயே அழுதுள்ளார். “மற்றவர்களின் உடல்நிலையைப் பற்றித் தெரியாமல் உருவ கேலி செய்யாதீர்கள்” என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் திடீரென ஹிஜாப் அணிவதும், ஆன்மீகத்தைப் பற்றிப் பேசுவதும் பட வாய்ப்புகள் இல்லாததால் செய்யும் ‘பப்ளிசிட்டி ஸ்டன்ட்’ என்று சிலர் விமர்சித்தனர். இதற்குப் பதிலளித்த மும்தாஜ், “எனக்கு சினிமா வாய்ப்புகள் வரவில்லை என்பதால் நான் இதைச் செய்யவில்லை. எனக்குப் பல வாய்ப்புகள் வதந்து ஆனால் நானே தான் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். எனக்குத் தேவை இப்போது புகழோ பணமோ அல்ல, மன நிம்மதி மட்டுமே” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
மனம் திறந்த மும்தாஜ் தனக்குக் காதல் இருந்ததாகவும், ஆனால் அது திருமணத்தில் முடியவில்லை என்றும் கூறியுள்ளார். தற்போது அவர் தனது குடும்பத்தினருடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
மேலும் அவர் கூறுகையில் திரையுலகில் தான் சந்தித்த துரோகங்கள் தன்னை மிகவும் காயப்படுத்தி விட்டதாகவும், அதிலிருந்து மீள்வதற்கே தானக்கு ஆன்மீகம் உதவியதாகவும் அவர் கூறுகிறார்.





