தைவானை சுற்றி விரிவான இராணுவ பயிற்சிகளை முன்னெடுக்கும் சீனா!
சீன மக்கள் விடுதலைப் படையின் கிழக்குப் போர் மண்டலப் பிரிவு தைவானைச் சுற்றி இராணுவ பயிற்சிகளை ஆரம்பித்துள்ளது.
“ஜஸ்டிஸ் மிஷன் 2025” என்று பெயரிடப்பட்ட இந்த இராணுவ பயிற்சி நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கிழக்குப் போர் மண்டலப் பிரிவின் காலாட்படை, கடற்படை, விமானப்படை மற்றும் ரொக்கெட் படைகள் தைவான் தீவு, தைவான் ஜலசந்தியின் வடக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்கு திசைகளில் இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன.
போர் பயிற்சியின் போது, கடல்-வான் போர் தயார்நிலைக்கு ரோந்து பணி, போர் மண்டலத்தை முழுமையாக கைப்பற்றுதல், முக்கிய துறைமுகங்கள் மற்றும் பகுதிகளை முற்றுகையிடுதல் போன்ற பணிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
“ஜஸ்டிஸ் மிஷன் 2025” இராணுவப் பயிற்சியானது தைவான் பிரிவினைவாதிகள் மற்றும் தைவான் விவகாரங்களில் தலையிடும் வெளி சக்திகளுக்கு எதிரான வலுவான எச்சரிக்கையாகும் என்றும், இது சீனாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கான சட்டபூர்வமான நடவடிக்கை என்றும் ஷி யி கூறியுள்ளார்.





