வசூல் மழையில் நனையும் ‘துரந்தர்’ – ரன்வீர் சிங்கின் மாஸ் ஹிட்!
ரன்வீர் சிங் நடிப்பில் டிசம்பர் 5, 2025 அன்று வெளியான ‘துரந்தர்’ (Dhurandhar) திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
திரையரங்குகளில் வெளியாகி 22-வது நாளை எட்டியுள்ள நிலையில், இப்படம் உலகளவில் ₹1000 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

கடந்த டிசம்பர் 5, 2025 அன்று வெளியான ‘துரந்தர்’, மிகக் குறுகிய காலத்தில் ₹1000 கோடி வசூலைத் தாண்டியுள்ள 9-வது இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
21-வது நாள் முடிவில் உலகளவில் ₹1006.7 கோடியை எட்டியடகாகவும், 22-வது நாள் நிலவரப்படி தற்போது உலகளாவிய வசூல் ₹1026 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இந்தப்படம் இந்தியாவில் மட்டும் நிகர வசூலாக (Net Collection) சுமார் ₹668 கோடி ஈட்டியுள்ளது.

இந்தப்படமானது இந்த ஆண்டில் ₹1000 கோடி வசூலை எட்டிய முதல் மற்றும் ஒரே இந்தியத் திரைப்படம் இதுவாகும்.
ஜவான் திரைப்படத்திற்குப் பிறகு, மிக வேகமாக (21 நாட்களில்) இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது பாலிவுட் படம் இது.
ரிஷப் ஷெட்டியின் காந்தாரா: சாப்டர் 1 மற்றும் ஷாருக்கானின் பதான் (Pathaan) ஆகிய படங்களின் வசூல் சாதனைகளை இது விரைவில் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் ‘ஏ’ சான்றிதழ் (Adults only) பெற்ற படங்களில் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படம் என்ற புதிய வரலாற்றையும் படைத்துள்ளது.
படத்தில் நடித்த ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கன்னா மற்றும் சஞ்சய் தத் ஆகியோரின் நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, ஆதித்யா தர்-ரின் மேக்கிங் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.






