பென்சில்வேனியாவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து பாரிய விபத்து!
பென்சில்வேனியாவின் (Pennsylvania) பிரிஸ்டல் டவுன்ஷிப்பில் உள்ள சில்வர் லேக் நர்சிங் ஹோமில் (Silver Lake Nursing Home) நேற்று இடம்பெற்ற வெடி விபத்தில் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்ததன் காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக வீட்டின் கூரை மற்றும் ஜன்னல் என்பன உடைந்து தீப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடுதியில் வசித்து வந்த பலர் உள்ளே சிக்கிக்கொண்டதாகவும், பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உயிரிழப்புகள் குறித்த விபரங்களையும் அதிகாரிகள் மதிப்பாய்வு செய்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியை தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





