அரசியல் இலங்கை செய்தி

நாமலை களமிறக்கி புது அரசியல் ஆட்டத்தை ஆடும் ரணில்?

தமது கட்சியை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே வழிநடத்துகின்றார் என வெளியாகும் தகவலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிராகரித்துள்ளது.

தனியார் தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு (18) ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் பங்கேற்றிருந்தார்.

இதன்போது “ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை ரணில் விக்கிரமசிங்கவே வழிநடத்துகின்றார் என்ற கருத்து அரசியல் களத்தில் நிலவுகின்றது.

நாமல் ராஜபக்கவை பொதுவேட்பாளராகக் களமிறக்கி ஆட்சியை பிடிப்பதற்கு அவர் முற்படுகின்றார் எனவும் கூறப்படுகின்றது. இது உண்மையா” என சாகர காரியவசத்திடம் வினவப்பட்டது.

அவ்வேளையிலேயே, இக்கூற்றை ஏற்க முடியாது. அதனை நிராகரிக்கின்றேன் என அவர் பதிலளித்தார்.

நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டு நலன் கருதியே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கும் முடிவை தமது கட்சி எடுத்தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டவேளை, மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் ராஜபக்ச ஆட்சி கவிழ்ந்தது.

ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு தப்பியோடினார். பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ச பதவி துறந்தார்.

இதனையடுத்தே ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பின்போது ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் முடிவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எடுத்தது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!