UKவில் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் – வீட்டுக் கட்டணங்களை குறைக்க பரிசீலனை!
பிரித்தானியாவில் நுகர்வோர் விலைக் குறியீட்டால் (CPI) அளவிடப்படும் பணவீக்கம், நவம்பர் மாதத்தில் எதிர்பார்த்ததை விட குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தரவுகளுக்கு அமைய 3.2 சதவீதமாகக் குறைதுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அக்டோபரில் 3.6 சதவீதமாக பதிவாகியிருந்தது.
கேக்குகள், பிஸ்கட், காலை உணவு தானியங்கள் மற்றும் புகையிலை போன்ற பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட சரிவுதான் பணவீக்கம் குறைவடைந்தமைக்கு முக்கிய காரணம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேற்படி பணவீக்கம் குறைந்துள்ளமையானது கிறிஸ்துமஸுக்கு முன்னதாக இங்கிலாந்து வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
சமீபத்திய பணவீக்கத் தரவு வெளியிடப்பட்ட பிறகு வீட்டுக் கட்டணங்களைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் ( Rachel Reeves ) தெரிவித்துள்ளார்.





